வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:45 IST)

அணில்கள், ஆமைகளுக்கு புது சரணாலயம்? – தமிழக அரசு அரசாணை!

Sanctuary
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அப்பகுதியை சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வனவிலங்குகள், கானுயிர்கள் வாழும் வனப்பகுதிகள் சரணாலயங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 16 வனப்பகுதிகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை “காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலம்” என்ற புது சரணாலயமாக அறிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் மென்மையான ஓடுகளை கொண்ட ஆமைகள், சாம்பல் நிற அணில்கள், சதுப்பு நில முதலைகள், மான்கள், கழுகுகள், புலிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டி விலங்குகள், 238 வகையான பறவையினங்கள் வாழ்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K