1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu districts have rain chances today

இன்று 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ள நிலையில் கனமழை தீவிரமடைந்துள்ளது.

சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
ஆசிய பல்கலைகழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டிக்கு எந்த இடம்?