திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:56 IST)

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓபிஎஸ்: பாதுகாப்பு கேட்டு மனு!

ops
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு கேட்டு அவர் காவல்துறையிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது
 
இதனை அடுத்து இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் சென்றார். இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாகவும் அதிமுக அலுவலகம் செல்லும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
மேலும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் பிரபாகர், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். இந்த மனுவை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.