1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (20:46 IST)

அதிமுகவின் 50 எம்.எல்.ஏக்கள் எங்கள் லிங்கில் உள்ளனர். ஆர்.எஸ்.பாரதி அதிரடி

bharathi
திமுகவின் 10 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு கட்சி மாற இருப்பதாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை கூறிய நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி 50 அதிமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் லிங்கில் உள்ளனர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
50 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எங்கள் லிங்கில் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் எப்போது அழைத்தாலும் திமுகவுக்கு அவர்கள் வந்து விடுவார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார் 
 
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் அதிமுக தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் அவர் திமுகவில் இணைவார்கள் என்று கூறியதற்கு பதிலடியாக ஆர் எஸ் பாரதி 50 அதிமுக எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது