திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:41 IST)

ஓபிஎஸ் திமுகவின் பினாமி: எடப்பாடி பழனிசாமி

edappadi
ஓ பன்னீர்செல்வம் திமுகவின் பினாமி என்றும் அவரை எப்படித் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 
 
இன்று தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுகவின் பினாமியாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் அவரை அதிமுகவும் அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் கூறினார் 
 
அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும் என்றும் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்
 
வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர் ஓபிஎஸ் என்றும் அவர் ஒவ்வொரு நேரமும் நினைத்து நினைத்து பேசுவார் என்றும் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர் என்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.