திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (10:35 IST)

விரைவில் சுற்றுப்பயணம்… ஓபிஎஸ் அறிவிப்பு

விரைவில் சுற்றுப்பயணம்… ஓபிஎஸ் அறிவிப்பு
சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் என மதுரையில் ஒ. பன்னீர் செல்வம் பேட்டி.


மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். வாலாந்துர், மதுரை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒ.பன்னீர்செல்வம் பெரியகுளம் திரும்பும் முன் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு ஆலோசனை நடத்தினார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய ஒ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உண்மைத் தன்மையினை விளக்கும்  சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் என தெரிவித்தார். இதில் முன்னாள் மதுரை முன்னாள்  எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.