திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:30 IST)

மன்னிப்பு கேட்டாலும் ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை: ஈபிஎஸ்

ops eps
மன்னிப்பு கேட்டாலும் ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான் என்றும், ஓபிஎஸ் மன்னிபு  கேட்டாலும் அவரை அதிமுகவில் இணைத்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார் 
 
அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என்றும் ஒரு சில கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் நீக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார். மேலும் ஓபிஎஸ் கீழ்தரமான செயலில் ஈடுபட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.