தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடி அணிக்கு இரட்டை இலை ; குரங்கு கையில் பூமாலை - கலாய்த்த தினகரன்
- இரட்டை இலை சின்னம் எடப்பாடி - ஓபிஎஸ் அணிக்கே - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- ஓ.பி.எஸ் அணி என ஒதுக்காதீர்கள் - மைத்ரேயன் நேரடி குற்றச்சாட்டு
- தொண்டர்களின் மனதையே பிரதிபலித்தேன் - மீண்டும் குண்டு வீசும் மைத்ரேயன்
- 'இரட்டை இலை' சின்னம் யாருக்கு: இன்று முடிவு செய்கிறது தேர்தல் ஆணையம்
தினகரன் மீதான பயம் - உச்ச நீதிமன்றம் கேவியட் மனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ்
இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சொந்தம் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
அந்நிலையில், வருகிற டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது. எனவே, தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை ஏற்பட்டால், எடப்பாடி அணியால் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாமல் போகும்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தற்போது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான ஏதேனும் உத்தரவை பிறப்பிக்கும் முன்பு தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
