திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (16:05 IST)

எடப்பாடி அணிக்கு இரட்டை இலை ; குரங்கு கையில் பூமாலை - கலாய்த்த தினகரன்

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் புகார் கூறியுள்ளார்.


 
பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
 
கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர்.  எங்கள் பக்கம் 122 எம்.எல்.ஏக்கள் மற்றும் மற்றும் 37 எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதிலேயே தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது.
 
ஆனால், தற்போது எடப்பாடி பக்கம் 111 எம்.எல்.ஏக்கள் மற்றும் குறைவான எம்.பி.க்களே இருக்கிறார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. நீதிபதி சாதிக் அலியின்  தீர்ப்பை அன்று ஏன் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை?
 
இதிலிருந்தே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எடப்பாடி அணிக்கு இரட்டை இலை என்பது குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலத்தான். மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம். 99 சதவீத தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
 
எடப்படிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டும் உள்ளது என்பதும், பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.