செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (10:17 IST)

டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற டிசம்பர் 21ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 
ஜெ.வின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை, ஓட்டுப்போட வாக்களர்களுக்கு  பணம் கொடுத்ததாக எழுந்த புகார் காரணமாக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. 
 
இந்நிலையில், வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தற்போது தேர்தல் தேதியை அறிவித்தால்தான் அந்த தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் கட்டாயத்தில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. அதோடு, இரட்டை இலை யாருக்கு என்கிற குழப்பமும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 5ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெறும். மனுவை வாபஸ் பெறுவதற்கு டிசம்பர் 7ம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வாய்ப்பு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.