தொடர்புடைய செய்திகள்
- 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை இத்தனை முறை உயர்த்தப்பட்டுள்ளதா?
- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 96 வயது பாட்டிக்கு சின்னம் ஒதுக்கீடு!
- பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்… எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
- அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்: சோனியா காந்தி அறிவிப்பு!
- மனு வாபஸ் பெற அவகாசம் முடிந்தது! – வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்!
ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்
முதலமைச்சர் மு க ஸ்டாலினால் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியபோது அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்றும் ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வினால் தான் ஸ்டாலின் நேரடியாக தெருவில் வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
