5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை இத்தனை முறை உயர்த்தப்பட்டுள்ளதா?
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி பொறுப்பேற்றார்.
அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பெரும்பான்மையான இடங்களில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
ஆனால், பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை உட்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 382 முறையும், டீசல் விலை 359 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பெட்ரோல் விலை 253 முறையும், டீசல் விலை 271 முறையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.