1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:56 IST)

பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்… எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சிவகாசி மாநகராட்சியில் நடந்த அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொம்மை முதல்வரை போல செயல்படுவதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் ‘8 மாதமாக திமுக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நமது ஆட்சியில் முடிவுற்ற திட்டங்களையே மீண்டும் தொடங்குகிறார். கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். கொள்ளை அடிப்பதே இந்த அரசு பிரதானமாக செயல்படுகிறது.

கட்சியை உடைக்க ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கே வேடிக்கையாக உள்ளது. நாங்கள் அதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை. ஆட்சியில் சட்டம் முற்றிலும் கெட்டுப்போய்விட்டது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வரைப் போல ஆட்சி செய்கிறார்’ எனக் கூறியுள்ளார்.