உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 96 வயது பாட்டிக்கு சின்னம் ஒதுக்கீடு!
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கு ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 174 வது வார்டில் 94 வயது பாட்டி காமாட்சி என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த் நிலையில் இவருக்கு தற்போது அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து 94 வயது பாட்டி காமாட்சி வீடுவீடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த பகுதியில் ஏற்கனவே பிரபலமாக உள்ள காமாட்சி பாட்டி பிரபலம் என்பதால் கண்டிப்பாக இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது