தொடர்புடைய செய்திகள்
- குப்பைக்கு விருது - கோவை முதலிடம் பிடிக்கும்..! அதிமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்..!!
- பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்..! இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும்..! ஓபிஎஸ்.
- மக்களவை தேர்தலில் பாமக தனித்துப் போட்டியா? டாக்டர் ராமதாஸ் தகவல்
- CAA- சட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்- அமைச்சர் உதயநிதி
- CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி
அதிபுத்திசாலி ஈபிஎஸ்.. அறிவாளி ஜெயக்குமாரிடம் கேளுங்கள்: செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் பதில்..!
நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் குறித்த வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்த அதிமுக தற்போது சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த கேள்வியை அதிபுத்திசாலி ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அறிவாளியான ஜெயக்குமார் இடம் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு சில நாளில் தான் அறிவிக்க இருப்பதாகவும் தற்போது பாஜக அணியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரட்டை இலை பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் விரைவில் அந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றுதான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனி அணியாக அமைத்து பாஜகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
Edited by Siva
