ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:09 IST)

பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்..! இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும்..! ஓபிஎஸ்.

OPS
மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டு இருக்கிறது.
 
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
தற்போது பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.