வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (12:36 IST)

மக்களவை தேர்தலில் பாமக தனித்துப் போட்டியா? டாக்டர் ராமதாஸ் தகவல்

பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில்,‘‘மக்களுக்காக உழைப்பதென் வந்துவிட்டால், வயதிற்கு இடமில்லை, மக்களுக்காக போராடி உயிரை விடுவேன். ஓய்வெடுக்க மாட்டேன்''என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
விரைவில் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் மற்றும்  மாநில கட்சிகள அனைத்தும் கூட்டணி பற்றியும், தொகுதி பங்கீடுகள் பற்றியும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்த நிலையில், சமீபத்தில் அதிமுக விலகியது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியாக பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? பாஜகவுடன் கைகோர்க்குமா? அல்லது திமுகவுடன் கூட்டணி அமைக்குமா? இல்லை தனித்து போட்டியிடுமா  என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ராமதாஸ், ‘‘மக்களுக்காக உழைப்பதென் வந்துவிட்டால், வயதிற்கு இடமில்லை, மக்களுக்காக போராடி உயிரை விடுவேன். ஓய்வெடுக்க மாட்டேன்’ என்று கூறினார். மேலும், ‘’மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக’’ தெரிவித்துள்ளார்.

மாநில நலன், தேசிய நலனின் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவெற்றப்பட்டுள்ளது.