அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது -பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் ஏப்ரல் ஏழாம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று சென்னையில், செய்தியாளர்களிடம் கூறிய அவர், அதிமுகவில் பிளவு ஏற்படும்போதெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவர். பொதுக்குழு செல்லும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பற்றிக் கூறமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கூறியது என்ன ஆனது. நிரந்தர பொதுச்செயலாளார் ஜெயலலிதா என்று தீர்மானம் நிறைவேற்றினார்களே அது என்ன ஆனது? மக்கள் மன்றத்திற்கு செல்வதே தீர்வாக அமையும். எடப்பாடி நடத்தும் செயற்குழு உள்ளிட்ட கூட்டங்கள் செல்லாது. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தவிருக்கிறோம் என்று கூறினார்.