செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மே 2022 (10:54 IST)

ரெனால்ட் ஆலை மூடப்படுவது ஓபிஎஸ் கற்பனை! – அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரெனால்ட் நிஸான் கார் ஆலை மூடப்பட உள்ளதாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக தொழில்துறைகள் சரிவை சந்தித்து வருவதாகவும், பிரபலமான கார் ஆலையான ரெனால்ட் நிஸான் ஆலை மூடப்படும் சூழல் உள்ளதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு “தமிழ்நாட்டில் எவ்வித குறையும் இன்றி தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் மீது ஏதாவது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார். அதிமுக ஆட்சியில்தான் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. ரெனால்ட் நிஸான் ஆலை மூடப்படும் சூழல் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் கற்பனையே தவிர ஆதாரமற்ற தகவலாகும்” என்று தெரிவித்துள்ளது.