1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:54 IST)

'உட்காருடா..' என்று சொன்ன திமுக அமைச்சர்? ஓ.பி.எஸ் & அதிமுகவினர் வெளிநடப்பு

ops
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்றும் தமிழக அரசுதான் நியமிக்க வேண்டும் என்ற சட்டமசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
 
இது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பேச முயற்சித்தபோது அமைச்சர் பெரியகருப்பன் அவரை 'உட்காருடா..'  என மரியாதை குறைவாக பேசியதாகவும் இதனை கண்டித்து அதிமுக எம்.எல்.எக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் பெரியகருப்பன் தன்னை 'உட்காருடா..'  என்று கூறியதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு முடிவு செய்துள்ளோம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.