1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS and EPS are worst: DMK Pala Karuppiah said

ஈபிஎஸ், ஓபிஎஸ் எதற்கும் லாய்க்கில்லாதவர்கள்: திமுக அதிரடி!

ஈபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் எதற்கும் லாக்கில்லாதவர்கள் என அதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுகவில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கூறியுள்ளார்.
 
தஞ்சாவூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்புறையாற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி மோடியை பார்க்க சென்ற முதல் சந்திப்பிலேயே அவர் மோடியிடம் அடைக்கலமாகிவிட்டார். இப்படிப்பட்டவர்களின் கையில் ஆட்சி மாட்டிக்கொண்டிருக்கிறது. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதற்கும் லாயக்கில்லாதவர்கள்.
 
18 எம்எல்ஏக்களின் நீக்கம் செல்லாது என்றே நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
நிமிர் - திரைவிமர்சனம்