திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (12:13 IST)

கரூரில் 69வது குடியரசு தின விழா - வீடியோ

கரூர் மாவட்டத்தில் 69 வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. 
 
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேசியக் கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
 
பின்னர், மூவர்ன பலூன்களை வானில் பறக்க விட்ட ஆட்சியர், அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். மேலும், 113 பயனாளிகளுக்கு 3 கோடியே 19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
 
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மேலும் 11 பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
-சி.ஆனந்த குமார்