1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Online rummy chennai auto driver suicide

ஆன்லைன் ரம்மியில் ரூ.50,000 நஷ்டம்.. ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தொங்கி தற்கொலை

suicide
கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மியால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் 50 ஆயிரம் பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
சென்னை மணலி என்ற பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற ஆட்டோ டிரைவரை தனது மனைவி பெயரில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்ற பணத்தை ஆன்லைனில் இழந்தார் 
 
இதனால் அவர் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மியால் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து உடனடியாக ஆன்லைன் ரம்மி ரம்மி தடைச் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கோரிக்கை விடப்பட்டு  வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
உடனே தயாராகாத பாஸ்தா; ரூ.40 கோடி கேட்டு வழக்கு போட்ட கஸ்டமர்!