1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Gujarat election vote today poll

குஜராத் சட்டமன்ற தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

election
குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்று நடை பெறுவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்களில் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
 
 இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 89 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் இன்றைய தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?