திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (18:19 IST)

மகள் திருமணமான 4வது நாளில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை!

suicide
மகள் திருமணம் ஆன நான்காவது நாளில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி சுனில் திவிவேதி என்பவர் தனது நான்காவது மகளுக்கு திருமணம் செய்து வைத்த 4வது நாளில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
 
ஏற்கனவே அவர் மூன்று மகள்களுக்கு திருமணம் செய்த வகையில் கடன் இருந்த நிலையில் நான்காவது மகளுக்கும் கடன் வாங்கி திருமணம் செய்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் கடன் தொல்லை அதிகமானதால் அவர் நேற்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நான்கு மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மறைந்த சுனிலுக்கு ஐந்தாவதாக ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran