ஆளுநரை கேள்விகேட்க எங்களுக்கு உரிமையில்லை: அமைச்சர் ரகுபதி
ஆளுநரை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் அளிக்கும் உரிமை மட்டுமே உள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் கையெழுத்திடவில்லை. நேற்றுடன் அவர் கையெழுத்திடவில்லை என்பதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆளுநரின் இந்த போக்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் ரகுபதி இது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
ஆளுநர் மசோதாவில் ஏன் கையெழுத்து போடவில்லை என்று அவரை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கேள்வி கேட்டால் பதில் அளிக்கும் உரிமை மட்டுமே எங்களிடம் உள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவில் ஆளுனர் ஏன் கையெழுத்திடவில்லை என தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்
Edited by Mahendran