தொடர்புடைய செய்திகள்
- ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- செப் 21 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 5,684: சென்னையில் எவ்வளவு?
- ஆண்களை வன்கொடுமை செய்யும் ஆட்டோ டிரைவர்! ஆண்களுமே தனியா போறது ஆபத்து போல!
- பழையபடி சிங்காரமாக மாறும் சென்னை; கட்டுப்பாட்டு பகுதிகள் குறைப்பு!
5 நாளைக்கு ஆன்லைன் க்ளாஸ் லீவ்! – மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு 5 நாட்கள் விடுப்பு அளிக்க அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதால் உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதாகவும், பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செப்டம்பர் 12 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யவும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
