திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:11 IST)

பழையபடி சிங்காரமாக மாறும் சென்னை; கட்டுப்பாட்டு பகுதிகள் குறைப்பு!

கடந்த சில மாதங்களாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் எக்கச்சக்கமாக இருந்த நிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மொத்தமாக கட்டுப்பாட்டு பகுதிகள் 12 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக மாதவரத்தில் 7 தெருக்கள், அண்ணா நகரில் 3 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.