வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:27 IST)

ஆண்களை வன்கொடுமை செய்யும் ஆட்டோ டிரைவர்! ஆண்களுமே தனியா போறது ஆபத்து போல!

சென்னையில் ஆட்டோவில் தனியாக சவாரி வரும் ஆண்களை ஆட்டோ ட்ரைவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் சார்லஸ். சில தினங்கள் முன்பு இரவு நேரத்தில் முதியவர் ஒருவர் சார்லஸின் ஆட்டோவில் பயணித்துள்ளார். ஆள் அரவமற்ற இடத்தில் திடீரென ஆட்டோவை நிறுத்திய சார்லஸ் முதியவரை உல்லாசம் செய்ய அழைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த முதியவர் மறுக்கவும் சார்லஸ் கத்தியை காட்டி முதியவரை மிரட்டியுள்ளார். பிறகு முதியவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார் சார்லஸ்.

இதுகுறித்து முதியவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் சார்லஸை கைது செய்துள்ளனர். ஆட்டோவில் தனியாக பயணிக்கும் ஆண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல்ரீதியாக தொல்லை செய்வது, பொருட்களை பறிப்பது போன்ற செயல்களில் சார்லச் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.