1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. not a single vote poll in ranipet

உள்ளாட்சி தேர்தல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச்சாவடி

தேர்தல்
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் எந்த பகுதியிலும் வன்முறை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு வாக்கு கூட பதிவாக வாக்குச்சாவடி ஒன்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வார்டு வரையறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
லக்கிம்பூர் விவசாயிகள் கொலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சுப்ரீம்கோர்ட்!