திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (09:19 IST)

என்ன ஈ, காக்கா கூட காணோம்.. காத்து வாங்கும் சாவடி! – தேர்தலை புறக்கணித்த மக்கள்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் அருகே மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொன்னங்குப்பம் பகுதி மக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். பொன்னங்குப்பத்தில் 2400 வாக்குகள் உள்ள நிலையில் தனி ஊராட்சி கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மொத்தமாக மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.