1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. clash among ADMK and DMK on voting booth

அதிமுக - திமுக வாக்குவாதம்- வாக்குசாவடியை விட்டு வெளியேற்றம்!

ராணிப்பேட்டை
சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்னங்கள் வெளியே தெரிவதாக கூறி அதிமுகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது வாக்குச்சாவடி வழியாக சென்ற திமுகவினர், அதிமுகவினர் வாக்குவாதம் செய்வதை பார்த்து வாக்குவாதம் செய்த அதிமுகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரையும் பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மது குடித்த தாத்தா, 5 வயது பேரன் மரணம் - என்ன நடந்தது?