1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. North indian workers arrest in abuse case

காதலிப்பதாக சொல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை! – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்!

Tamilnadu
நாமக்கலில் நூற்பாலையில் பணிபுரிந்த பெண்ணை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலைபார்த்து வந்துள்ளார். அந்த ஆலையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் நூற்பாலை அருகே உள்ள தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற பால்ராஜ் அங்கு தனது சக இரண்டு நண்பர்களோடு சேர்ந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் பெண் மயக்கமடையவே பயந்த மூவரும் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

மயக்கம் தெளிந்த பின் இளம்பெண் இதுகுறித்து ஆலை மேலாளரிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு!