திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (09:19 IST)

2 நாட்களாக சோறு, தண்ணியில்லை; பசியால் மடிந்த சிறுவன்! – விழுப்புரத்தில் சோகம்!

விழுப்புரத்தில் சில நாட்கள் முன்னதாக தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன் பசியால் இறந்ததாக தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வடக்கு தெருவில் சலவை தொழிலாளி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டியில் கடந்த 15ம் தேதி 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனை யாராவது கொன்று தள்ளுவண்டியில் போட்டார்களா என்பது குறித்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்காமல் பசியில் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவன் குறித்து போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.