செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (10:39 IST)

தமிழகம் முழுவதும் நமக்கு நாமே திட்டம்! – ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை!

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்களிப்பாக இருக்கும். ஊரக பகுதிகளில் பள்ளி, மருத்துவமனை, சமூக கூடங்களுக்கான கட்டிடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.