தொடர்புடைய செய்திகள்
- பெங்களூரில் பதுங்கினாரா ராஜேந்திர பாலாஜி?! தேடி விரைந்தது தனிப்படை!
- தமிழகம் முழுவதும் நமக்கு நாமே திட்டம்! – ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை!
- யூட்யூப் பார்த்து பிரசவ முயற்சி; குழந்தை உயிரிழந்த சோகம்! – ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!
- 2 நாட்களாக சோறு, தண்ணியில்லை; பசியால் மடிந்த சிறுவன்! – விழுப்புரத்தில் சோகம்!
- உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; ஆனால் மழை இல்லை! – வானிலை ஆய்வு மையம்!
மனம் திருந்து வருபவர்களை மன்னிப்பதே அழகு! – ஈபிஎஸ் முன்னிலை ஓபிஎஸ் சூசக பேச்சு!
கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக ஈபிஎஸ் முன்னிலையில் சொன்ன குட்டிக்கதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற நிலையில் அவர் கட்சியின் பொது செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது விடுதலையாகி வந்த சசிகலா தான் மீண்டும் அதிமுகவை மீட்பேன் என பேசி வருகிறார்.
இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவினருக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை ஒன்றை சொல்லி “மனம் திருந்தி வருபவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு” என பேசியுள்ளார். ஓபிஎஸ் மறைமுகமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து சூசகமாக பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
