தொடர்புடைய செய்திகள்
- சிறுபான்மையினர் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளும் எடப்பாடி.. தமிமுன் அன்சாரிக்கு வலை
- கொடநாடு கொலை, கொள்ளை; எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்த கூடாது! – தனபாலுக்கு இடைக்கால தடை!
- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்?
- ''எடப்பாடி பழனிசாமி நன்றி மறந்துவிட்டார்'' - ஹெச்.ராஜா
- 'எந்தப் பிரச்சனையும் சந்திக்க தயார்- எடப்பாடி பழனிசாமி
மருத்துவமனையில் திருமாவளவன்.. உடல்நலம் விசாரித்த எடப்பாடி.. புதிய கூட்டணியா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமக மற்றும் பாஜக இல்லாத கூட்டணியில் தான் இருப்போம் என்று ஏற்கனவே திருமாவளவன் கூறியுள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
