1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Next two days Tamil Nadu gets red alert warning

தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு RED ALERT!!

தமிழகம்
தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆம் தேதி கன மழை முதல் மிதமான மழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
12 மணிநேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்