செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (11:23 IST)

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு புதிய அதிகாரி: தமிழக அரசு அறிவிப்பு

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து அந்த பிரிவுக்கு புதிய அதிகாரி குறித்த நியமன உத்தரவை தமிழக அரசு சற்றுமுன் பிறப்பித்துள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு புதிய ஏடிஜிபி-யாக அபய் குமார் சிங் என்பவர் நியமனம்  செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர் தமிழ்நாடு காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது. தீர்ப்பு வருவதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்பே அவசர அவசரமாக புதிய அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது