1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CBI refused to investigation Idol kidnap case

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது: சிபிஐ அதிரடி

cbi
சிலை கடத்தல் வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் சிபிஐ இந்த வழக்கை விசாரணை செய்ய முடியாது என்று கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்கை விசாரணை செய்ய சிபிஐ மறுத்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ விசாரித்தால்தான் இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர்கள் பிடிபட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அசாமில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி