திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 செப்டம்பர் 2018 (07:35 IST)

பொன்.மாணிக்கவேல் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா

சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டது. இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்து கொண்டிருந்தபோது திடீரென இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஊல்பட பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

 இந்த நிலையில் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அவர்களின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாஜகவின் முக்கிய தலைவரான ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்து அதில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ ஜி திரு.பொன்.மாணிக்கவேல் அவர்களின் மகள் திருமணத்தில்' என்று கூறியுள்ளார். ஹெச்.ராஜா பதிவு செய்த புகைப்படம் ஒன்றில் பொன்.மாணிக்கவேல், ஹெச்.ராஜாவை சிரித்த முகத்துடன் வரவேற்பது போன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.