1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New method of prisoners releatives meet

கைதிகளை உறவினர்கள் சந்திக்க நவீன வசதி: சிறைத்துறை டிஜிபி தகவல்!

jail
தமிழ்நாட்டு சிறையில் உள்ள கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திப்பதில் நவீன முறை பயன்படுத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி என்பவர் தெரிவித்துள்ளார்.
 
 தமிழகத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்கும் போது பொருட்களை கொடுப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மத்திய சிறைகளில் கைதிகள் குடும்பத்தினரை சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடித் தடுப்பு அமைக்கப்படும் என்றும் கைதிகள் மற்றும் உறவினர்கள் போன்கள் மூலம் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்
 
இதன் மூலம் கைதிகளுக்கு அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் பொருட்களை கொடுப்பது தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். முதல் கட்டமாக மதுரை கோவை திருச்சி ஆகிய சிறைகளில் இந்த வசதி அமல்படுத்தப்படும் என்றும் அதன் பிறகு அனைத்து சிறைகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக எம்பிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!