அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சரானதாலோ என்னவோ தனக்கு நெருக்கமான மற்றும் திரைப்பட துறையில் இருப்பவர்கள் சிலருக்கு அரசில் சில பொறுப்புகளை முதல்வர் விஜய் கொடுத்து வருகிறார். தனது ஆஸ்தான ஜோதிடருக்கு ஆலோசகர் பதவி கொடுத்தார். ஆனால், அதற்கு எதிர்ப்பு வரவே பின் வாங்கினர்.
அதேநேரம், தனக்கு நெருக்கமான ஜெகதீஷ், லயோலா மணி உள்ளிட்ட சிலருக்கு அரசில் சில பதவிகளை வழங்கினார். இந்நிலையில்தான், ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருவானமுள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் பிரபல தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி இடம் பெற்றுள்ளார்.
இவர் அட்லி இயக்கத்தில் விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்தவர். சமீபத்தில் கூட பிகில் எங்களுக்கு லாபத்தை கொடுத்த திரைப்படம் என பேட்டியும் கொடுத்திருந்தார். தற்போது அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் மட்டுமில்லாமல் ஆன்மிக பேச்சாளர் சுமதிஸ்ரீ, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எச் அதிகாரி சம்பத், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமநாதன் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் இந்த குழு செயல்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.