1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (17:15 IST)

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் உயிரிழப்பு: அதிர்ச்சியில் உறவினர்கள்!

dead
தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் அனுசியா என்பவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் எட்டு நாட்களில் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து அனுசியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை இடம் விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதுகுறித்து அனுசியா குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகே தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
அனுசியா குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறப்புக்கு பின்னர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva