1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. police encounter two dead in Bihar

சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: 2 பேர் பலி

encounter
சிறையிலிருந்து தப்பித்த குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்ததில் 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
பீகார் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஜ்னிஷ் மற்றும் மனிஷ் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் 
 
இந்த நிலையில் இந்த இரண்டு குற்றவாளிகள் திடீரென சிறையிலிருந்து தப்பிச் சென்றதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்
 
இந்த நிலையில் வாரநாசி பகுதியில் அந்த இரண்டு குற்றவாளிகளும் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களை தேடி போலீசார் சென்றனர் 
 
அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த இரண்டு பேரும் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து போலீசார் திருப்பி சுட்டதில் தப்பிச்சென்ற குற்றவாளிகள் இரண்டு பேரும் குண்டடிபட்டு உயிரிழந்தனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்