சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் பாலியல் பலாத்கார குற்றவாளி
திகார் சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
இவரது அமைச்சரவையில், ஊழல் நடந்ததாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சர் சத்தியேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபி ஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, பணமோசடி வழக்கில் சசத்தியேந்தார் ஜெயினுடன் இருவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையில் உள்ள சத்தியேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோவை பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேஷாத் வெளியிட்டிருந்தார், இது வைரலாகி விமர்சனங்கள் எழுந்தது.
இதுகுறித்து, டெல்லி துணைமுதல்வர் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார். அதில், திகார் சிறையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபிதான் செய்யப்பட்டது. இது மசாஜ் அல்ல என்று தெரிவித்தார்.
மேலும், சத்யேந்திர ஜெயினுக்கு முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளர். எனவே அவருக்கு பிசியோதெரபி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் சந்தியேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர், பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையிலுள்ள குற்றவாளி என்ற தகவலை சிறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
Edited by Sinoj