வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (14:42 IST)

ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி தினகரன் தான்: சி.வி.சண்முகம்

Shunmugam
ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணமும் டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார் என்றும் அதனால்தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார் என்றும் கூறினார் 
 
மேலும் டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர் என்றும் அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள் என்றும் தெரிவித்தார் 
 
டிடிவி தினகரன் ஒரு துரோகி என்றும் அம்மாவுக்கும் துரோகம் செய்தவர் என்றும் அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran