செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (16:54 IST)

இது ஒரு சூழ்ச்சியான நடவடிக்கை: ஆதார்-மின் இணைப்பு குறித்து வேல்முருகன்

Velmurugan
ஆதார் மற்றும் மின் இணைப்பு இணைப்பது ஒரு சூழ்ச்சியான நடவடிக்கை என்றும் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தான் தமிழக அரசு இந்த இணைப்பினை கட்டாயப்படுத்துகிறது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக திமுக அரசு ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணையாவிட்டால் மின் கட்டணம் கட்ட முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுதான் இந்த நடவடிக்கை என்றும் இது மத்திய அரசு செய்யும் சூழ்ச்சி என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் தெரிவித்துள்ளார்
 
மத்திய அரசு வலியுறுத்தியதன் காரணமாக தமிழக அரசு இந்த இணைப்பை வலியுறுத்தி வருகிறது என்றும் ஒரு இணைப்புக்கு மேலிருக்கும் விவசாயிகளின் இணைப்பை கண்டுபிடித்து அதை நிறுத்துவதற்காக தான் இந்த ஏற்பாடு என்றும் மானியத்தை ரத்து செய்தற்குதான் இந்த ஏற்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ இந்த குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran