1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (08:57 IST)

ரஷ்யாவை நீக்கலைனா ஐ.நாவை இழுத்து மூடுங்க..! – கடுப்பான உக்ரைன் அதிபர்!

President of Ukraine
ரஷ்யாவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து நீக்காதது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் மேலும் பல பகுதிகளில் ஓயாமல் வெடிகுண்டு தாக்குதல் தொடர்ந்து வருகிறது. மக்கள் பலர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இந்த போர் நிலவரத்தில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும் செயல்பாடுகள் ரீதியாக போரை நிறுத்துவதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபடாமல் உள்ளன. ரஷ்யா மீது ஒரு சில பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் உலக அரங்கில் ரஷ்யாவின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டு வருகிறார்.

ஆனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறும் நாடுகளின் இன்னமும் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவை பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து நீக்கவும், ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கவும் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதை ஐ.நா செயல்படுத்தாத நிலையில் கடுப்பான ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் ஐ.நா சபையை இழுத்து மூடிவிடுங்கள் என்று காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.