அரசியல் நாகரீகம் தெரியாதவர்; கனிமொழியை விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்
நேற்று கோரத்தாண்டவம் ஆடி கரையை கடந்த 'கஜா' புயல் பலத்த பொருட்சேதங்களை ஏற்படுத்தியபோதிலும், பெரும்பாலான உயிர்ச்சேதங்கள் தடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் சுறுசுறுப்பான பணிகளே காரணம் ஆகும்.
தமிழக அரசின் மீது பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்த விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பாராட்டினர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் தமிழக அரசின் மின்னல் வேக மீட்புப்பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் திமுக எம்பியும், கருணாநிதி மகளுமான கனிமொழி, 'கஜா புயலுக்கு தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். கனிமொழியின் இந்த விமர்சனம் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்றும், திமுக தலைவரே இந்த விஷயத்தில் பாராட்டு தெரிவித்திருக்கும் நிலையில் அரசியல் நாகரீகம் தெரியாமல் கனிமொழி கூறியுள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.